ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சாவூர்: 3 ஆண்டுகளில் 68, 000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை

தஞ்சாவூர்: 3 ஆண்டுகளில் 68, 000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 68, 000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை துறை மற்றும் புற்றுநோய் சிகிச்சை துறை நரம்பியல் துறை ஆகியவற்றின் சார்பில் மார்பக புற்றுநோய், பக்கவாத நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமை வகித்தார். பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். இணை பேராசிரியர் ஜீவராமன் வரவேற்றார். தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்து இணை பேராசிரியர் சுமதி ரவிச்சந்திரன், பக்கவாத நோய் குறித்து ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். சுகாதார களப்பணியாளர்கள் மூலம் மார்பக புற்றுநோய் மற்றும் பக்கவாதம் நோய்க்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மார்பக புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். உரிய நேரத்தில் பரிசோதனை செய்தால் இதிலிருந்து முற்றிலும் விடுபடலாம். பக்கவாத நோய் தாக்கினால் காலம் தாழ்த்தாமல் ஆறு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இதற்கான விலை உயர்ந்த மருந்துகள் தஞ்சாவூர் மருத்துவமனையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా