தஞ்சை: டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

74பார்த்தது
தஞ்சை: டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
தஞ்சை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சை அருகே உள்ள வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி நீலாவதி (53). செவ்வாய்க்கிழமை நீலாவதி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். பின்னர் மாலை வேலை முடிந்து ஊருக்குச் செல்வதற்காக டிராக்டர் டிரெய்லரில் நீலாவதி உள்பட ஆறு பெண்கள் அமர்ந்து வந்தனர். 

டிராக்டர் புதுஆற்றங்கரை பாலம் அருகே வந்தபோது நீலாவதி மற்றும் இலஞ்சியம் (65), சிவகாமி (50) ஆகிய இரு பெண்கள் டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நீலாவதி இறந்தார். மேலும் இரு பெண்களுக்கு அங்கே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வல்லம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி