பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக ஐடி விங் தனது X தள பக்கத்தில், "சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது! "நான் மட்டும் தான் எம்.ஜி.ஆர். தொண்டன்" என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார்" என்று பதிவிட்டுள்ளது.