தஞ்சாவூர்: வழிப்பறிக்கு திட்டமிட்ட ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது

74பார்த்தது
தஞ்சாவூர்: வழிப்பறிக்கு திட்டமிட்ட ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது
தஞ்சை அருகே வழிப்பறி செய்ய திட்டம் தீட்டிய 3 ரவுடிகள் உட்பட 5 பேரை தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்- வெட்டிக்காடு சாலை கல்யாண ஓடை கால்வாய் பகுதியில் தஞ்சை தாலுகா காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் தஞ்சை விளார் ரோடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் மது ஆனந்த் (30), தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை, பாத்திமா நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (28), தஞ்சை பனங்காடு, கோரிக்குளம் புதுத்தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் திவாகர் (24), தஞ்சை பர்மா காலனி பாரதிதாசன் நகரை சேர்ந்த மாயன் மகன் கணேசன் (24), தஞ்சை கோரிக்குளம் புதுத்தெருவை சேர்ந்த செல்வம் மகன் கணேசன் (28) என்பது தெரிய வந்தது.  

இவர்கள் அவ்வழியே செல்பவர்களிடம் வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதையடுத்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மது ஆனந்த், விக்னேஸ்வரன், கணேசன் மூன்று பேரும் காவல்துறை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பதும், 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி