பாப்பாநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட வடசேரி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது 14 வயது மகள் இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்குச் சென்ற மகள் காணவில்லை என பாப்பநாடு காவல் நிலையத்தில் தந்தை செந்தில்குமார் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாப்பாநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியைத் தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் தொடரும் பெண் கடத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களிடம் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகின்றன. எனவே எஸ்.பி., இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் மாணவியை யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற ரீதியில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.