திருக்காட்டுப்பள்ளியில் ஆடிப்பூர கஞ்சி கலய விழா

84பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் ஆடிப்பூர கஞ்சி கலய விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மேல வீதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப் பூர கஞ்சிக்கலய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், பூதலூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பூதலூர் வட்டத் தலைவர் அ. இளவரசன் சக்தி கொடி ஏற்றினார்.

அக்னீஸ்வரர் கோயிலில் திருவை யாறு முன்னாள் எம்எல்ஏ எம். ரத்தினசாமி விழாவை தொடங்கி வைத்தார். அக்னீஸ்வரர் கோயிலில் இருந்து 700-க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து பிரதான வீதிகள் வழியாக மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்திற்கு வந்து அன்னைக்கு சமர்ப்பனம் செய்தனர். மன்றத்தில் அன்னைக்கு சிறப்பு அலங்காரம்
செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, கே. பூவழகன் வரவேற்றார். ஏற்பாடுகளை மன்றத் தலைவர் கே. ஜெயராமன், துணைத் தலைவர் ஏ. பி. நாகராஜ், பொதுச் செயலாளர் சிந்தாதேவி. என். கல்யாணி, கே. கற்பகம், ஓம் சக்தி குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி