தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் கோயிலில் தமிழக முதல்வர் அறிவிப்பின் கீழ் ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம் நேற்று (பிப்ரவரி 15) நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தமிழக முதல்வரின் ஏழைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தின் கீழ் மூப்பக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் பிரவீனுக்கும் ஏரகரத்தைச் சேர்ந்த மகாலட்சுமிக்கும் திருமணம் மங்களாம்பிகை சன்னதியில் நடைபெற்றது.
மணமக்களுக்கு தங்க மாங்கல்யத்துடன் பீரோ, கட்டில் உள்ளிட்ட 75 வகை சீர்வரிசை பொருட்களை அறங்காவலர்கள் சிதம்பரநாதன், ராணி தனபால் செயல் அலுவலர் முருகன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தி வைத்தனர். திருமண விருந்தும் நடைபெற்றது.