கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, டிஜிட்டல் கிராப் சர்வே பணி தமிழக அரசால் துவங்கப்பட்டு 8 மாத காலம் ஆகியும் உரிய உபகரணங்கள் மற்றும் இணைய வழி செயலியை மேம்படுத்தாமல் இருப்பதை கண்டித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, டிஜிட்டல் கிராப் சர்வே பணியை இனி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டு நேற்று(செப்.10) முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் 70 பேர் கலந்து கொண்டனர்.