பயங்கர விபத்து.. காரில் சிக்கிக்கொண்ட தாய், மகள் (வீடியோ)

19696பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் பயங்கர சாலை விபத்து நடந்தது. அப்போது வேகமாக வந்த க்ரெட்டா கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிராக்டர் டிராலி மீது மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. பயணித்த தாயும், மகளும் காரில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசார் தாய் மற்றும் மகளை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி