“திமுக ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம்”

78பார்த்தது
“திமுக ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூகநலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இலவச பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு 6,641.47 கோடி அளவுக்கு பயன் கிடைத்துள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 404.41 கோடி செலவில் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு 214.27 கோடி செலவில் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 2.73 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி