நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர்

56பார்த்தது
செங்கல்பட்டில் இன்று (மே 24) அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் தன்னிடம் வாரண்ட் இருந்தும் நடத்துனர் டிக்கெட் கேட்டதாக கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாரண்ட் இருந்தும் தன்னிடம் டிக்கெட் கேட்டது ஏன்? வாரண்டை முழுமையாக படித்துவிட்டு டிக்கெட் கேட்கவும் என நடத்துனரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக நாங்குநேரி பகுதியில் அரசு பேருந்து ஒன்றில் பணி நிமித்தமாக வந்த காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் அரசு பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி