உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து நடந்தது. அப்போது வேகமாக வந்த கனரக லாரி, பைக்கில் சென்ற தாய் மற்றும் மகன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.