டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

56பார்த்தது
டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் இன்று (ஆக.29) நடைபெற்றது. அதில், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், சக வீரரான லாஸ்லோ டிஜெரை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் முன்னிலை வகித்தார். அப்போது லாஸ்லோ டிஜெருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் ஜோகோவிச் அடுத்தசுற்றுக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி