இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது. 14 - 24 வயதுக்குட்பட்ட 1479 பேரிடம் 5 சமூக ஊடகங்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் இன்ஸ்டாகிராம் இளைஞர்களிடையே மோசமான மனநல பிரச்சனையையும், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே அதிக நேரம் இன்ஸ்டா பயன்படுத்துபவர்கள் உங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளுங்கள்.