தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 29) இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.