தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் கனிமவள லாரிகள் அதிக அளவில் சென்று வருகின்றன. தினமும் இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அச்சாலையில் அடிக்கடி வாகன நெரிசல் மிகுந்து காணப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இவ்வழியே ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் ரயிலை தவறவிடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இன்று மாலையில் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பல பயணிகள் ரயிலை தவறவிட்ட நிலை ஏற்பட்டது.