தென்காசி: ரூ. 2.22 கோடியில் பணிகள்; மாவட்ட பஞ்சாயத்து முடிவு

73பார்த்தது
தென்காசி: ரூ. 2.22 கோடியில் பணிகள்; மாவட்ட பஞ்சாயத்து முடிவு
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நேற்று (பிப்ரவரி 21) நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேவி, சுதா, கனிமொழி, பூங்கொடி, சாக்ரடீஸ், முத்து லெட்சுமி, சுப்பிரமணியன், சுதா, மைதீன் பீவி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் கருவந்தா கிராம ஊராட்சி சோலைச்சேரி முதல் இருதயமுடையார் குளம் செல்லும் சாலையில் தடுப்புச் சுவர் அமைத்தல், வீரசிகாமணி ஊராட்சி வடநத்தம்பட்டி சாலையில் மேம்பாடு செய்தல், பூலாங்குளம் கிராம ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், இனாம் கோவில்பட்டி கிராம ஊராட்சி மற்றும் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலையில் பாலம் மற்றும் சிமென்ட் தளம் அமைத்தல், கரிவலம் வந்தநல்லூர் ஊராட்சி வடக்கு தெற்கு ரதவீதியில் தார் சாலை அமைத்தல், பெரிய கோவிலாங்குளம் ஊராட்சி வடக்கு தெருவில் தடுப்புச் சுவர் அமைத்தல், தேவிபட்டினம் ஊராட்சி நடுவூர் ராமசாமியாபுரம் பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்தல், மற்றும் கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி பள்ளிக்கூட தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 2.22 கோடி மதிப்பில் 23 வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தொடர்புடைய செய்தி