சில மாதங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது பிரச்சனை மேலும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி நிர்வாகிகளை சந்திக்கிறார். தொடர்ந்து திருவிடந்தையில் மாநாடு நடைபெறும் இடத்தை அவர் பார்வையிடுகிறார்.