சங்கரன்கோவில் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

56பார்த்தது
சங்கரன்கோவில் பகுதியில் ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு குழந்தைகளுக்கு முறையான சத்துணவு அளிக்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார். அங்கன்வாடி குழந்தைகளை பராமரிப்பது குறித்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி