தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் உட்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட யாக சாலைகளில் காலை 6 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, ஆறாம் கால யாக பூஜை, பிரதான கலசங்கள் புறப்பாடு நிகழ்வுகள் நடைபெற்று பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சரியான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.