காங்கிரஸ் விழா: தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் பங்கேற்பு

61பார்த்தது
காங்கிரஸ் விழா: தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் பங்கேற்பு
பாவூர்சத்திரம் அருகேயுள்ள, இலங்காபுரிபட்டணத்தில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கரத்தினத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கொடியேற்று விழா நேற்று(செப்.4) நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம். எல். ஏ. தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து  தங்கரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில இலக்கிய அணி துணை தலைவர் ஆலடி சங்கரய்யா, வட்டார தலைவர்கள் கே. பி. குமார் பாண்டியன், மகாராஜா, மாவட்ட வர்த்தக அணி தலைவர் எம். பி. சுப்பிரமணி யன்,  மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர். சுப்பிரமணியன், கீழப்பாவூர் நகர தலைவர் சிங்கக்குட்டி (எ) குமரேசன், ஆறுமுக பாண்டி, பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் மேரி மாதவன், ராதா குமாரி மாரிமுத்து, சுரண்டை நகராட்சி கவுன்சிலர் தெய்வேந்திரன்,

காங்கிரஸ் நிர்வாகிகள் அமல்ராஜ், லட்டு (எ) ரத்தினசாமி, பி. ஆர். எஸ. ;ராமர், செல்லப்பா, தவசிமுத்து, மதியழகன், சிவன்பாண்டி, சண்முக பாண்டியன, ; சீவலப்பேரி  (எ) துரை,   ராமநாதன்டைலர, மதிய ராஜா, தாவீது முன்னாள் வார்டு உறுப்பினர் பெரிய முத்து, வார்டு உறுப்பினர் கைக் கொண்டான், முருகன், ஞான செல்வம், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி