இந்தியாவில் அதிக சாலை விபத்து நேரிடும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் (23,000) முதலிடத்தில் உள்ளது ஆண்டுக்கு 10.6% (18,000 பேர்) சாலை விபத்துகளுடன் நாட்டில் 2ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. சாலை விபத்துகளில் 3ஆவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும், 4ஆவது இடத்தில் மத்தியப் பிரதேச மாநிலமும் உள்ளது. சாலை விபத்துகளை குறைக்க முடியாதது, வருத்தத்தை தருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார்.