கண்ணாடி கிளாஸ்களில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றி, அதில் கலர் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மீதமுள்ள கால் பங்கில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை பரப்பி, ஒரு சிறு துளையிட்டு திரியை போட்டு விளக்கேற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்ற அதிக எண்ணெய் தேவைப்படாது. விளக்கு நீண்ட நேரம் எரியும். மேலும் வண்ணப் பொடிகள் சேர்ப்பதால் விளக்கை சுற்றி வண்ணமயமாக காட்சி தரும்.