தமிழகத்தில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று (டிச., 13) முதல் மூன்று நாட்கள் விழா கொண்டாடப்படும். தீப திருநாட்களில் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதனையொட்டி வெளியூரில் இருந்து அகல் விளக்குகளை மொத்தமாக வாங்கி வந்து பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. விதவிதமான டிசைன்களில் அகல் விளக்குகள் ஒரு ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆர்வமுடன் விளக்குகளை வாங்கி செல்கின்றனர்.