2035ஆம் ஆண்டிற்குள், பாரத் அந்தரிக்சா ஸ்டேசன் என்ற பெயரில், இந்தியா தனக்கான விண்வெளி மையத்தை கட்டமைத்திடும் என, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டிற்குள், ககன்யான் திட்டத்தின் கீழ் இந்திய வீரர்கள் விண்வெளிக்குச் செல்வார்கள் என்றும், 2040ஆம் ஆண்டிற்குள், இந்திய விண்வெளி வீரர்கள், நிலவில் கால்பதிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.