இன்ஸ்டாகிராம், யூடியூப்-ல் அதிகமாக ரீல்ஸ்களை தொடர்ந்து பார்ப்பதால் Brain rot என்ற பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மூளைக்கு வேலை இல்லாமல், ஏதோ ஒன்றை பார்த்து மகிழ்வதால், மூளைக்கு உடனடி நிறைவு கொடுத்து, அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கிறது. இது அறிவாற்றலை குறைத்து, வேலையில் கவனச் சிதறலை ஏற்படுத்துவதுடன், மனித உணர்ச்சிகளையும் குறைக்கும் என நிபுணர்கள்கூறுகின்றனர்.