சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 3,453 மில்லியன் கன அடி நீர் இருப்பும், நீர் வரத்து 6498 கன அடி உள்ளது. இதனால், முதற்கட்டமாக இன்று காலை 8 மணிக்கு ஆயிரம் கன அடி உபர் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம்,திருநீர்மலை, வழுதியம்பேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.