உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் செல்போன் கொண்டு வந்து பயன்படுத்தியுள்ளனர். இதைப் பார்த்த ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் மாணவர்களை கண்டித்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர் நேற்று (டிச.12) ஆசிரியர் வகுப்புக்கு வந்தபோது அவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.