வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பொட்டுக்கடலை, எள்ளை வறுத்து தனியாக வைக்கவும். வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய்களை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் வெல்லத்தை ஒரு கம்பி பதம் வரை பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நெல் பொறியுடன் காய்ச்சிய வெல்லம், வறுத்த எள், பொட்டுக்கடலை, தேங்காய் துண்டுகள், ஏலக்காய் சேர்த்து கிளறினால் கார்த்திகை பொரி தயார்.