திண்டுக்கல் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 3 வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், தனியார் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.