ஆற்றில் சிக்கிய தனியார் பேருந்து.. அச்சத்தில் பயணிகள்

69பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, கிளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ள நீர் சென்றது. இதனால், அவ்வழியாக சென்ற பேருந்து, வெள்ளத்தில் சிக்கியது. நகரமுடியாமல் இருந்த அந்த பேருந்தில் இருந்த 50 பயணிகள் அச்சத்தில் அலறியடித்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள், வெள்ளத்தில் சிக்கிய பேருந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி