சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

575பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஶ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் சரியாக 6. 30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள் பால், பன்னீர், திரவியம் விபூதி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் சோடசை தீபாராதனை நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் காலை மாலை வீதி உலா நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெறுகிறது

கொடியேற்ற நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் துணை ஆணையர் கோமதி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர்கள் பக்தர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி