தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டமும் இன்று (ஜனவரி 22) தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார் தலைமையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா, சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவம் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.