வீட்டில் கஞ்சா செடி வளா்த்த பெண் கைது

68பார்த்தது
வீட்டில் கஞ்சா செடி வளா்த்த பெண் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி இந்திரா நகரை சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவரது மனைவி ஆறுமுக தாய் (63). இவரது வீட்டின் முன்பகுதியில் கஞ்சா செடி வளா்த்து வருவதாக புளியங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆறுமுகத்தாயை போலீஸாா் கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி