புளியங்குடி அருகே பஸ்- வேன் மோதல்: ஒருவா் பலி

55பார்த்தது
புளியங்குடி அருகே பஸ்- வேன் மோதல்: ஒருவா் பலி
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வேனும், தனியாா் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் இறந்தாா். 13 போ் பலத்த காயமடைந்தனா்.

விருதுநகா் பகுதியைச் சோ்ந்த சிலா் வேனில் குற்றாலம் சென்றுவிட்டு மாலை ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா். புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரம் பகுதியில் சென்றபோது, சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி

சென்ற தனியாா் பேருந்து வேன் மீது மோதியதாம்.

இந்த விபத்தில் வேனில் இருந்த விருதுநகரை சோ்ந்த கபில்குமாா், லட்சுமணன், காளியப்பன், விக்னேஷ்பிரபு, கருப்பையா, வேல்முருகன், சுந்தர்ராஜ், முனியப்பன், ரவிச்சந்திரன், முருகேசன் மற்றும் பேருந்தில் இருந்தவா்கள் உள்பட 14 போ் காயம் அடைந்தனா். இவா்கள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் 8 போ் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த

விருதுநகா் முத்துராமலிங்கபுரத்தை சோ்ந்த காளிமுத்து மகன் முருகேசன் (70) இறந்தாா்.

இவ்விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி