தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடி தபசு திருவிழாவில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அம்பாசமுத்திரம் சந்தை மாடன் கோயில் தெருவை சேர்ந்த பேச்சு முத்து (42) மற்றும் வெள்ளாங்குளி வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (40) ஆகியோர் பைக் திருடியது தெரிய வந்தது.
இந்த நிலையில் இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.