கடலூர்: அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயலாற்றிட வேண்டும் என வட்டார அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி பி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தினார். மேலும், "மாணவர்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்வதோடு, தொடர்ச்சியாக மீளாய்வுக்கூட்டம் நடத்த வேண்டும்” என கூறினார்.