பீகாரை சேர்ந்த அவ்னிஷ் குமார் என்பவர் பீகார் பப்ளிக் கமிஷன் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார். இவரும், லக்கிசராய் மாவட்டத்தை சேர்ந்த குஞ்சன் என்ற பெண்ணும் 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர் வேலை கிடைத்ததும் அவ்னிஷ் குமார் குஞ்சனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குஞ்சனின் உறவினர்கள் வேலைக்கு செல்லும் வழியில் அவ்னிஷ் குமாரை கடத்திச்சென்று குஞ்சனுக்கு துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.