திருவள்ளூர் மாவட்டம் அருகே இயங்கி வரும் அரசு உயர் நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனபால் (40) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். இவர், அப்பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக கூறி, ஆசை வார்த்தைகளால் பேசி மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.