அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து திருப்பூரை மணிப்பூர் போல ஆக்கிவிட பாஜக முயல்வதையே சமீப நிகழ்வுகள் காட்டுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வன்முறையாலும் திமிராலும் தமிழர்களை ஆளமுடியாது; உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதைச் சகோதரர் ராகுல் காந்தி நேற்று நிரூபித்துவிட்டார். தமிழ்நாட்டை ஆத்மார்த்தமாக நேசித்து வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என மோடி அரசு தொடுத்த இரட்டைத் தாக்குதலில் இருந்து மேற்கு மண்டலம் மீண்டெழத் தேவையான சீர்திருத்தங்களை இந்தியா கூட்டணி ஆட்சி உறுதியாகச் செய்யும் என பதிவிட்டுள்ளார்.