அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசிய நிலையில், "தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்" என தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அவர், "பேசுவதில் அவரவருக்கு ஒரு பாணி இருக்கிறது, இது அவரின் பாணி. ஆனால், தலைவர்களைப் பற்றி பேசும்போது வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.