தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ முக்கிய தகவல்

72பார்த்தது
தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ முக்கிய தகவல்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ, தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது பணம் கொடுப்பது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றை பொதுமக்களே நேரடியாக புகார் தெரிவிக்க சி-விஜில் என்ற செயலி உள்ளது. அதில் புகார் பதிவிடப்பட்ட 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிகர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிக்க சக்சம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க, தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று நேரடியாக வாக்குகளை பெற முடியும்.என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி