வெளிநாட்டில் சாலை விபத்தில் பலியான தமிழ்க் குடும்பம்

54பார்த்தது
வெளிநாட்டில் சாலை விபத்தில் பலியான தமிழ்க் குடும்பம்
கனடாவில் கடந்த ஏப்ரல் 29-ல் மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை போலீசார் துரத்த, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில், காரில் பயணித்த, சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்‌ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55) மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தையும் பலியானார்கள்.இந்த விபத்து தொடர்பான வழக்கை கனடாவின் சிறப்பு விசாரணைப்பிரிவு விசாரிக்கிறது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட சில காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி