மகாராஷ்டிரா பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 5 பேர் பலி.!

67பார்த்தது
மகாராஷ்டிரா பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 5 பேர் பலி.!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தாம்னாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 13)மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் ரவீந்தர் சிங்கால் தெரிவித்தார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.