இந்தியா - வங்கதேச ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பும்ரா, சிராஜ், பண்ட், கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த வங்காளதேச அணி டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.