கிளிசரின் போட்டு அழுத சூர்யா.. பயில்வான் விமர்சனம்

97655பார்த்தது
கிளிசரின் போட்டு அழுத சூர்யா.. பயில்வான் விமர்சனம்
சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த நடிகர் சூர்யா துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார். தனது ஆரம்ப காலகட்டத்தில் அவர் தனக்கு மிகவும் உதவியதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார். இந்நிலையில் நடிகர் சூர்யா கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு சென்றபோது கண்கலங்கி அழுததற்கு, அழுகையை வரவழைக்கும் கிளிசரின் காரணமாக இருக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து இருக்கிறார். மேலும் நடிகர்களின் அழுகை எங்களுக்கு தெரியும். கிளிசரின் போடாமல் எப்படி அழுவார் எனவும் தெரியும் என கிண்டல் அடித்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி