தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகளின் ரசிகர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நடிகர்
சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், நீண்ட நேரம் நீரில் கால்வைத்து நிற்பவர்கள் இரவு நேரத்தில் மஞ்சளும் தேங்காய் எண்ணெயும் பூசிக் கொள்ளுமாறு
சூர்யா கூறிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. ரசிகர்களும் அந்த ஆடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.