விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூடுதல் அலுவலர்களை நியமித்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும். VVPAT-ல் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் தற்போது 5% மட்டுமே எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகிறது. ஏ.டி.ஆர். அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.