வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை மற்றும் கருப்பட்டி என ஒப்பிட்டால் மூன்றில் கருப்பட்டி தான் சிறந்தது. பனையிலிருந்து எடுக்கப்படுவது கருப்பட்டி. இதில் 363 மில்லிகிராம் அளவு கால்சியம் இருப்பதோடு பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இந்த மூன்றிலுமே கலோரியின் அளவு கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும். ஆனாலும், கருப்பட்டியில் மட்டுமே சத்துகள் அதிகம் என்பதால் தான் மற்ற இரண்டையும் விட இது ஆரோக்கியத்திற்கு நல்லது.