கிராம்பு சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையை சீராக்கவும், பாக்டீரியாவை அழிக்கவும் பயன்படுகிறது. இது சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும், செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. கிராம்புகளில் யூஜெனால் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கிராம்புகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.